சுப்பிரமணியர் திருக்கல்யாணத்தில் ருசிகரம்; ஒரு தேங்காய் ரூ.3.3 லட்சத்திற்கு ஏலம்
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் போடியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலநாகேஸ்வரி என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முருகன் ரூ.3 லட்சத்து ஆயிரம் வரை ஏலம் கேட்டார். பால நாகேஸ்வரி ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஒரு தேங்காய் ஏலம் எடுத்தார். இவரது கணவர் திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.