உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்; பக்தர்கள் பரவசம்

தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்; பக்தர்கள் பரவசம்

காரமடை; ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி கோயிலில் புஷ்ப யாகம்  நடந்தது.


மேட்டுப்பாளையம் அருகே  தென்திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, புஷ்ப யாகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கூடை கூடையாக வாசனை மலர்கள் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து, புஷ்ப யாகம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !