உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா; யாக பூஜை துவக்கம்

நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா; யாக பூஜை துவக்கம்

கோவை ; அன்னூர் வட்டம் தென்னம்பாளையம் ரோடு, நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் வியாழக்கிழமை 14ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை முதற்கால யாக பூஜை நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து தன பூஜை, பூர்ணாஹதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !