திருச்செந்துாரில் கந்தசஷ்டி திருவிழா; சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
ADDED :327 days ago
திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில், 10ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்பாளின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திருச்செந்துார், கந்தசஷ்டி திருவிழாவில்7ம் தேதி சூரசம்ஹாரம், 8ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. 8ம் நாள் விழாவான, 9ம் தேதி இரவு சுவாமிகுமரவிடங்கப் பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருளி பட்டினப்பிரவேசம் நடந்தது. 11ம் திரு நாளான இன்று மாலையில் கோயில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.