உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரியில் முருக பெருமான் ஆராட்டு ஊஞ்சல் ஊர்வலம்

கன்னியாகுமரியில் முருக பெருமான் ஆராட்டு ஊஞ்சல் ஊர்வலம்

கன்னியாகுமரி; கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 39வது ஆண்டு ஆராட்டு விழா நேற்று நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்தூவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர். பின்னர், பன்னீர், குங்குமம், சந்தனம், களபம், தேன், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி முதலியவற்றால் முருகபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு, சமய கருத்தரங்கம் நடந்தன. முன்னதாக ஆராட்டு ஊஞ்சல் வளையாபதி ஸ்ரீசுயம்பு இல்லத்தில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !