கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED :334 days ago
கோவை ; கார்த்திகை மாதம் பிறந்தாலே சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணை பிளக்கும். இன்று கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் துளசி மணி மாலை அணிந்து விரதம் துவங்கினர். தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று துவங்கும் விரதம் ஜனவரி 2025 மகரஜோதியுடன் நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை வழிபட்டனர்.