வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு 50 கிலோ அன்னத்தில் அலங்காரம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு 50 கிலோ அன்னத்தில் அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு ஐப்பசி மாத அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜைகளை செய்தார். சுமார் 50 கிலோ அன்னத்தில் அன்ன அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.