உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி குமரகோட்டத்தில் கிருத்திகை விழா; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சி குமரகோட்டத்தில் கிருத்திகை விழா; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத கிருத்திகையையொட்டி இன்று காலை மூலவர் முருகப் பெருமானுக்கு பால், சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. உற்சவர் முத்துகுமார சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !