உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவக்கம்; வெள்ளித்தேரில் அம்மன் பவனி

பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவக்கம்; வெள்ளித்தேரில் அம்மன் பவனி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார்.


பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான வெள்ளித்தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில், விநாயக பெருமானும் எழுந்தருளினர். பூசணிக்காய் சீர் முடிந்த பின் நேற்று இரவு, 8:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், புஷ்ப அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்த போது வாழைப்பழங்களை சூறை விட்டு வழிபட்டனர். விநாயகப்பெருமான் தேர் முன்னே செல்ல, மாரியம்மன் தேர் பின்தொடர்ந்து சென்றது. கோவில் வளாகத்தில் இருந்து சென்ற தேர், வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது. போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை, மூன்றாம் நாள் தேரோட்டத்துக்கு பின், கோவில் வளாகத்தில் தேர் நிலைநிறுத்தப்படும். அதன்பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !