உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் சிருங்கேரி பீடாதிபதி சுவாமி தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் சிருங்கேரி பீடாதிபதி சுவாமி தரிசனம்

காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் செய்தார்.

 சிருங்கேரியில் இருந்து விஜய யாத்திரை தொடங்கி வழியில் பல்வேறு ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்துக் கொண்டு நேற்று (16.11.2024) சனிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தியை வந்தடைந்ததோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தார். சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமியை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல. சுதீர் ரெட்டி மற்றும் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கோயிலுக்குள் சென்ற ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகர பாரதி சுவாமி ஞான பிரசுனாம்பிகை சமேத வாயுலிங்கேஷ்வரரை தரிசித்தார். பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்தவர் நிருபர்களிடம் பேசுகையில்; தனது ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக, மக்களுக்கு தர்மத்தை போதிப்பது, சனாதன தர்மம் காக்க மக்களுக்கு வழிகாட்டுவது, அனுகிரஹபாசனம் செய்வது அவசியம் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !