உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
ADDED :335 days ago
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் நேற்றிவு பெய்த கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை, மலைப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், மலையடிவாரத்திலுள்ள தோணிஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. கோவில் அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.