உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா – 2; வேண்டியது கிடைக்க... சென்னை ஹரிஹர புத்ரசாஸ்தா

தினமும் ஒரு சாஸ்தா – 2; வேண்டியது கிடைக்க... சென்னை ஹரிஹர புத்ரசாஸ்தா

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.


சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் உள்ள ஹரிஹர புத்ர சாஸ்தாவை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.  1949ல் சபரிமலை ஐயப்பன் சன்னதி தீக்கிரையானது. அதற்காக புதிய சிலை தமிழகத்தில் செய்யப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் முன் மூன்று நாட்கள் அச்சிலைக்கு சிறப்பு பூஜை இங்கு நடந்தது. இதன் நினைவாக ஐயப்பன் சன்னதி இங்கு உருவானது. பூர்ணா புஷ்கலாவுடன் ஹரிஹர புத்திர சாஸ்தா சன்னதியும் இங்கு உள்ளது. கார்த்திகை மண்டல பூஜை 41 நாட்கள், ஜன. 8 – 15 வரை சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கும். ஆவணி திருவோணம், மகரஜோதியன்று இவரை தரிசிப்பது .  


எம்.ஜி.ஆர்.,சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ., 

நேரம்: காலை ; 6:30 – 11:30 மணி, மாலை 4:30 – 8:30 மணி


தொடர்புக்கு: 98408 96541, 90804 16392

அருகிலுள்ள தலம்: சென்னை கந்தகோட்டம் கந்தசுவாமி கோயில்

நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 – 9:00 மணி

தொடர்புக்கு: 044 – 2535 2192.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !