உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை

குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை

குன்னுார்; குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை துவங்கி நடந்து வருகிறது.


குன்னுார் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், மண்டல கால பூஜை நடந்து வருகிறது. அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. காலையில் அத்தாழ பூஜை, மாலையில் ராக்கால பூஜை நடந்து வருகிறது. இரவு 9:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவையொட்டி, கோவிலை சுற்றி, 300 விளக்குகள் எரிய வைக்கப்பட்டு ஜோதிமயமாக காட்சியளித்தது. சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்று வழிபடுகின்றனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !