உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் பரிகார பூஜை; கோவில் நடை அடைப்பு

திருச்செந்துாரில் பரிகார பூஜை; கோவில் நடை அடைப்பு

திருச்செந்துார்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரிகார பூஜைகளுக்காக கோவில் நடை அடைக்கப்பட்டது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை மிதித்து உதவி பாகன் உதயகுமார், 45, அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். தெய்வானை தாக்கி, பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ரேவதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரனை செய்தார். இந்நிலையில் கோவில் நடை 1மணி நேரம் அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளுக்கு பிறகு மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !