உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மதுரை; இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சோம வாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தாலும், சங்காபிஷேகத்தை தரிசிப்பதாலும், குடும்ப ஒற்றுமை ஏற்படும், ஆரோக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு நேற்று இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவில்கொடி மரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, அதில் புனித நீர் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன . இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !