உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை பஞ்சமி; வாராகியை வழிபட கேட்ட வரம் உடனே கிடைக்கும்!

தேய்பிறை பஞ்சமி; வாராகியை வழிபட கேட்ட வரம் உடனே கிடைக்கும்!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். வராஹி எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்புரிய கூடியவள். மேலும், வாராகியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.


தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார்!. பஞ்சமியில் வாராகியை வழிபட எதிரி தொல்லை நீங்கும்.  தடைகள் விலகும். ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். வீட்டில் வாராகியம்மனுக்கு விளக்கேற்றி செம்பருத்தி. செவ்வரளி, பானகம். உளுந்து வடை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. மாதுளை, சிவப்பு அவல், ஏதேனும் இனிப்பு. பாயசம் அல்லது வெல்லம் போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !