உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :681 days ago
கோவை; உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்பம் மற்றும் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.