காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை
ADDED :327 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாதத்தை யொட்டி நவம்பர் 1ம் தேதி முதல் தினந்தோறும் மூலவர் சன்னதியில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் லட்ச வில்வ அர்ச்சனை நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, புதன்கிழமை, வியாழக்கிழமை (நேற்று) இரண்டு நாட்களிலும் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு லட்ச வில்வார்ச்சனை கோயில் தலைமை அர்ச்சகர் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடந்தது. முன்னதாக சிறப்பு கலசம் பூஜைகள் நடந்தது. இதில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.