பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா; ரஷ்ய கலைஞர்கள் இசை அஞ்சலி
ADDED :424 days ago
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. நாளை பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி, நேற்று ரஷ்ய கலைஞர்கள் அலெக்சாண்ட்ரா டிர்சு, லிடியா டிர்சு ஆகியோரின் வயலின், பியானோ இசை நிகழ்ச்சி மற்றும் பிரார்த்தனைகள் பக்தர்கள் முன்னிலையில் நடந்தன. இதில் ஏராளமான பக்தரகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.