உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரதநாட்டியம், கோலாட்டம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

பரதநாட்டியம், கோலாட்டம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர். திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள், பரத நாட்டியம் மற்றும் கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை நேற்று கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை தரிசித்தனர்.  இவர்களுடன் ஏராளமான பக்தர்கள் சென்றனர். புதுச்சேரியை சேர்ந்த பக்தர்கள், நடராஜ பெருமானை சுமந்தவாறு கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !