சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை
ADDED :412 days ago
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், இன்று கார்த்திகை சோமவார பூஜை நடந்தது. மூலவர் வால்மிகீஸ்வர சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.