உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோவிலில் சோமவார வழிபாடு; சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம்

நெல்லையப்பர் கோவிலில் சோமவார வழிபாடு; சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம்

திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரத்தை முன்னிட்டு, இன்று சோமாஸ்கந்தர் சன்னதியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு பால்,பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !