உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திண்டுக்கல் கொங்கு வள்ளிக்கும்மி குழு சார்பில், பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. சமீப காலங்களாக, கொங்கு பாரம்பரிய கும்மி நடனம், கோயில் திருவிழாக்களில் பிரபலம் அடைந்து வருகிறது. திண்டுக்கல் கொங்கு வள்ளிக்கும்மி குழுவினர், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை பல்வேறு கோயில் ஸ்தலங்களில் ஆடி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக, முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் கும்மி நடனம் நடந்ததிட்டமிடப்பட்டு பழனி, பழமுதிர்சோலை கோயில்களில், வள்ளிக்கும்மி நடனம் ஆடியுள்ளனர். மூன்றாவது நிகழ்ச்சியாக, திருச்செந்துார் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் கொங்கு வள்ளிக்கும்மிகுழுவை சேர்ந்த 60 பெண்கள், கும்மி நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சி, அங்கு திரண்டிருந்த முருக பக்தர்களிடையே வரவேற்பை பெற்றது. செல்பி, போட்டோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !