அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை ஏகாதசி சிறப்பு அபிஷேகம்
ADDED :348 days ago
கோவை; கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மூலவர் கரி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.