உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம்; மூலமந்திர ஹோமம்

தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம்; மூலமந்திர ஹோமம்

புதுச்சேரி; புதுச்சேரி தருமாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, அனுமன் மூலமந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கணபதி, ஹோமம், ராமந்திர ஹோமம் நடந்தது. 10.20 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !