ரண பத்ரகாளியம்மன் கோவிலில் யாக பூஜை: மாஜி அமைச்சர் பங்கேற்பு
ADDED :349 days ago
திண்டிவனம், நத்தமேடு ஸ்ரீ காளி சித்தர் பீடத்திலுள்ள ரண பத்ரகாளியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு இரவு சிறப்பு யாக பூஜை நடந்தது. காளி சித்தர் ஹரி செந்தில்நாதன் நடத்திய யாகசாலை வேள்வியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தங்கள் கைகளால் நவதானியங்கள், மிளகாய், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை செலுத்தினர். யாக பூஜையில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார். இதில் திண்டிவனம் நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நோய் நொடிகள் நீங்குவதற்காகவும், கெட்ட நேரத்தை நல்ல நேரமாக பைரவர் மாற்றுவர் என்ற நம்பிக்கையில் சிறப்பு பூஜையில் மாஜி அமைச்சர் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.