திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானைக்கு பூஞ்சை நோய்
ADDED :344 days ago
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 26 வயது தெய்வானை யானை பராமரிக்கப்படுகிறது. இந்த யானை தாக்கியதில், நவ., 18ல் உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் இறந்தனர். இதனால், வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உட்பட ஐந்து குழுக்களின் கண்காணிப்பில், இந்த யானை உள்ளது. சில மாதங்களாகவே, இந்த யானைக்கு உடலில் பல இடங்களில் பூஞ்சை இருந்தது. தற்போது காலில் மட்டும் வெளியே தெரியும் வகையில் உள்ளது. பூஞ்சை நோயால் யானைக்கு எந்த பிரச்னையும் இல்லை. யானைக்கு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘அழுகிய பழங்கள் கொடுத்தால், இதுபோன்ற தோல் நோய் ஏற்படும். விரைவில் பூஞ்சை நோய் குணமாகிவிடும்’ என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.