கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :393 days ago
கொடைரோடு; அம்மையநாயக்கனுார் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் வியாழன் தோறும் காலையில் பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். இன்று சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனபொடி, மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.