புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :16 hours ago
புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புவனகிரியில், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயான சூறை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி, கடந்த 14 ம் தேதி கொடியேற்றப்பட்டது. அடுத்தடுத்த தினங்களில், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கடந்த, 16ம் தேதி, மயான சூறை மேல்புவனகிரி இடு காட்டில் மாலையில் நடந்தது. பக்தர்கள் தானியங்களை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன் தினம் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.