சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் கார்த்திகை சுவாதி உற்சவம்
ADDED :281 days ago
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். யோக நிலையில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால், இரண்டு வாரங்களாக ஏராளமான பக்தர்கள், யோக நரசிம்மரை தரிசனம் செய்ய சோளிங்கரில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், நரசிம்மருக்கு உகந்த சுவாதி நட்சத்திரம் இன்று அமைந்துள்ளதால், சிறப்பு உற்சவம் நடக்கிறது. அதேபோல், சோளிங்கர் நகரில் அருள்பாலிக்கும் உற்சவமூர்த்தி பக்தோசித பெருமாள் கோவிலிலும், இன்று சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.