திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவிலில் பாலாலயம் பூஜை
ADDED :385 days ago
பண்ருட்டி; பண்ருட்டி திருவதிகை ஆதி குணபரேஸ்வரர் கோவில் திருப்பணிக்கான பாலாலயம் பூஜை இன்று நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை 1300 ஆண்டுகால பழமைவாய்ந்த பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த நிலாயதாட்சி அம்மன் சமேத ஆதி குணபரேஸ்வரர் கோவில் திருப்பணி செய்வதற்கு மூலவர் விமானத்திற்கான பாலாலயம் பூஜை இன்று நடந்தது. கோவில் சுற்றுசுவர், தரைத்தளம், வர்ணம் பூசி திருப்பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு நகரமன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தின்ஷா முன்னிலை வகித்தார். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கதிர்காமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்ன், முன்னாள் அறங்காவலர் சபாபதி, கவுன்சிலர் கவுரிஅன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.