உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில்; தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில்; தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

கெய்ரோ: 2,100 ஆண்டுகள் பழமையான கோவில் எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லக்சோர் என்ற நகரத்தின் வடக்குப்பகுதியில் 125 கி.மீ., தொலைவில் உள்ள அத்ரிபிஸ் என்ற பகுதியில் மலைக்குன்றின் அருகே இந்த எகிப்து பாரம்பரிய கோயில் மண்ணில் புதைந்துள்ளது தெரிய வந்தது.


ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழக எகிப்தியாலஜி பிரிவு தலைவர் கிறிஸ்டன் லீட்ஸ் கூறியிருப்பதாவது: இந்த கோயிலில் சிங்கத்தலை கொண்ட தெய்வம் மற்றும் கி.மு. 170ம் ஆண்டு கால 8வது மன்னர் டோலமி சிலைகளும் உள்ளன. கர்ப்பம் குறித்து வேண்டுதல் தெய்வங்கள் இருந்ததாக தெரிகிறது. 2100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் பெயர் இன்னும் தெரியவில்லை. நுழைவு வாயிலில் கோபுரங்கள் காணப்படுகின்றன. மொத்தம் 4 விமானங்கள் உள்ளன. இதில் கூடுதல் அறைகள் இருந்தன. ஒவ்வொரு அடுக்கிற்கும் செல்ல ஏதுவாக வழிகள் உள்ளது. பழங்கால கோயில் கண்டுபிடிப்பில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !