உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு 108 பால்குட அபிஷேகம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு 108 பால்குட அபிஷேகம்

கடலுார்; கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில், ஐயப்பன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாததத்தையொட்டி, தினசரி ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். நேற்று 108 பால்குடங்களை, குமரகோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து, ஐயப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை செயல்அலுவலர் மகேஷ் மற்றும் ராஜராம், உதயவேலு, செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !