பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்; அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED :409 days ago
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக யாக பூஜை , திருக்கல்யாணம் நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கலசங்களை புனிதநீர் நிரப்பி யாக பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. யாக பூஜைக்கு பின் இரவு 7:25 மணிக்கு பிரகதீஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன், மனோன்மணி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் நடத்தினர். அதன் பின் பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நடந்தது. கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.