ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீபம்; ஜொலித்தது தாயார் சன்னதி
ADDED :317 days ago
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நாச்சியார் தாயார் சன்னதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது. இதில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீ சக்கரம் சங்கு சக்கரம் ஆகிய வடிவில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. மேலும் தாயார் சன்னதி சுற்றுப்பிரகாரத்திலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நந்து பட்டர் தீபு பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.