உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா; பக்தர்கள் தரிசனம்

வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா; பக்தர்கள் தரிசனம்

வால்பாறை; வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவில் நேற்று முன் தினம் இரவு,7:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பஜனை பாடல்களை பாடி ஐயப்பனை வழிபட்டனர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !