உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை

கவரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை

கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டையில் உள்ள அய்யப்ப சேவா சங்கம் சார்பில், அங்குள்ள தேவி பவானி புத்தியம்மன் கோவிலில் நேற்று இரவு, அய்யப்பன் மலர் பூஜை நடத்தது. மாலை அணிந்து விரதம் இருந்து வரும், அப்பகுதி அய்யப்ப பக்தர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என, 200 பேர் பூஜையில் பங்கேற்றனர். கூடியிருந்த அனைவரும் அய்யப்ப பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் பதினெட்டு படிகளுடன் புலி மேல் அமர்ந்து அருள்பாலித்த அய்யப்பனுக்கு மலர் பூஜையும், படி பூஜையும் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !