உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பாடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

இரும்பாடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

சோழவந்தான்; சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் பாலமுருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது. கார்த்திகை முதல் வாரத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். கடைசி வாரத்தை முன்னிட்டு நேற்று கோயில் முன் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை நடந்தது. மூலவர் பாலமுருகன், சிவன், பார்வதி, விநாயகர், முருகர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனையில் நடந்தன. மின் அலங்கார ரத்தத்தில் எழுந்தருளிய சுவாமி கிராம வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !