பல்லடத்தில் உலக நலனுக்காக மகா ருத்ர பூஜை
ADDED :316 days ago
பல்லடம்; உலக நலன் வேண்டியும், அமைதி நிலவவும், மகா ருத்ர பூஜை வழிபாடு, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மண்டபத்தில், வாழும் கலை அமைப்பு சார்பில் நடந்தது. சாத்வி தயாமை சுவாமிகள் பூஜையை நடத்தி வைத்தார். விநாயகர் வழிபாட்டுடன் பூஜை துவங்கியது. பாதரச லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா ருத்ர பூஜை துவங்கியது. மலர்களால் பூஜிக்கப்பட்டு, மந்திர அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.வாழும் கலை அமைப்பின் மூத்த ஆசிரியர் சம்பத் தலைமையில் சத்சங்கம் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும், பூஜிக்கப்பட்ட பாதரச லிங்கத்துக்கு மலர் துாவி வழிபாடு செய்தனர். பல்லடம் பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் வாழும் கலை ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.