உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரணி தீபம்; வீட்டில் விளக்கேற்றி வழிபட குடும்பம்‌ ஒற்றுமை, செல்வம்‌ பெருகும்‌!

பரணி தீபம்; வீட்டில் விளக்கேற்றி வழிபட குடும்பம்‌ ஒற்றுமை, செல்வம்‌ பெருகும்‌!

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். 


திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ மாலை விளக்கேற்றி வழிபட வேண்டும்‌. இன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு. மண்‌ விளக்குகளை வீட்டின்‌ வாசல்‌ படிகளில், படிக்கு மூன்று வீதம்‌ ஏற்றி வைப்பது மரபு. வீட்டில்‌ நல்லெண்ணெயிலும்‌, முருகனுக்கு இலுப்பெண்ணெயி லும்‌ விளக்கேற்றி வழிபடுவது நல்லது. நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌. இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌. மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌. நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌. ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !