ராமேஸ்வரம் கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழை நீர்
                              ADDED :321 days ago 
                            
                          
                          
ராமேஸ்வரம்; வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், நேற்று ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. மேலும் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் சாலையில் ஊர்ந்தபடி சென்றன. ராமேஸ்வரம் கோவில் மேல்தளத்தில் இருந்து மழைநீர் இறங்கி சுவாமி, அம்மன் சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் குளம் போல் தேங்கியது. மழை நின்றதும் கோவில் ஊழியர்கள் மின் மோட்டார் வாயிலாக நீரை அகற்றினர்.