உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

கடலுார்; கடலுார் அடுத்த திருமாணிக்குழி அம்புஜாக்ஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி காலை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், இரவு விநாயகர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 5ம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு பஞ்சமூர்த்திகள் வாகன வீதியுலா, 6 முதல் 12ம் தேதி வரை சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், பரிவேட்டை, பஞ்சமூர்த்திகள் வாகன புறப்பாடு நடந்தது. இதையடுத்து, இன்று காலை 9:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, நாளை 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் தேரடி பார்த்தல் மற்றும் மாலை 6:00 மணிக்குமேல் மலை மேல் ரோகிணி தீப உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !