மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
293 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
293 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
பழநி முருகன் கோயிலில் டிச.,7ல் சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. டிச.12 மாலை சாயரட்சைபூஜையில் பரணி தீபம், மூலவர் சன்னதியில் ஏற்றப்பட்டது. சண்முகருக்கு மஹா தீபாராதனை நடந்தது. நேற்று (டிச.,13.,) திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் நடந்தது. மதியம் சண்முகார்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. மதியத்திற்கு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. அதன்பின் மாலை சாயரட்சை பூஜை நடந்து. மேலும் சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெற்றது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தீபத்தம்பத்தில் திருகார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
293 days ago
293 days ago