சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சுதை இடிந்து விழுந்தது
ADDED :294 days ago
சிதம்பரம்; கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் மூன்று நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் மேற்கு கோபுரத்தின் வெளிப்புறத்தில், இரண்டாம் மாடத்தில் இரு பக்கமும் அமைந்துள்ள, துவாரபாலகர் சுதைகள் உடைந்து விழுந்ததால், அதன்கீழ் இருந்த சுதைகளும் சேதமடைந்தன. அதையொட்டி, பாதுகாப்பு கருதி மேற்கு கோபுரம் வழியாக பக்தர்களை அனுமதிக்காமல், மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர். கோபுரத்தில் இருந்து விழுந்து சேதமான சுதை பகுதிகளை கோவில் ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்.