உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் மார்கழி திருவிழா துவக்கம்

பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் மார்கழி திருவிழா துவக்கம்

பாலக்காடு; பாலக்காட்டில் நாததாரா இசை சங்கமம் சார்பில், மார்கழி திருவிழா  சங்கீத உற்சவம் இன்று துவங்கியது.

பிராயிரி கண்ணுக்கோட்டுகாவு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் இன்று மாலை 6:30 மணி அளவில், மார்கழி சங்கீத உற்சவத்தை, பிரபல இசைக்கலைஞர் பாலக்காடு ஸ்ரீராம் துவக்கி வைத்தார். இசைச்சங்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். வயலின் வித்வான் நெடுமங்காடு சிவானந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தொடர்ந்து பாலக்காடு ஸ்ரீராமின் இசைக்கச்சேரி நடந்தது. அவருக்கு இடப்பள்ளி அஜித் (வயரின்), திருச்சூர் ஜெயகிருஷ்ணன் (பிரதங்கம்), பய்யன்னூர் கோவிந்தபிரசாத் (முகர்சங்க்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். ஜன., 12ம் தேதி வரையில் உள்ள, விடுமுறை நாட்களில் நடக்கும் இந்த சங்கீத உற்சவத்தில் 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !