காரமடை ரங்கநாதர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பரவசம்
ADDED :306 days ago
காரமடை ; மார்கழி பிறப்பை முன்னிட்டு, கோவில்களில் காரமடை பக்தர்கள் பஜனை பாடி வழிபாடு நடத்தினர். மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு காரமடை நான்கு ரத வீதிகளில் ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர், ஸ்ரீ தாச பளஞ்சிக மகாஜன சங்க திருப்பாவை பஜனை வழிபாட்டு குழுவினர் பக்தி பாடல்களை பாடி வலம் வந்தனர்.