உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினர்:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினர்:

மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் மாத பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடினர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன், சந்திரன் என 3 தீர்த்தங்கள் உள்ளன. இன்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தக் கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து அஸ்திரதேவர் 3 தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும்  தீர்த்தவாரி நடந்தது.  தீர்த்தவாரியின் போது   பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி  வழிபட்டனர். தீர்த்தவாரி பூஜைகளை வினோத் குருக்கள் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !