உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மூன்றாம் நாள்; ஸ்ரீரங்கத்தில் வாமன அவதாரத்தில் உற்சவர் அருள்பாலிப்பு

மார்கழி மூன்றாம் நாள்; ஸ்ரீரங்கத்தில் வாமன அவதாரத்தில் உற்சவர் அருள்பாலிப்பு

ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் மூன்றாம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,  உற்சவர் வாமன அவதாரத்தில் அருள்பாலித்தனர்.


திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !