தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :645 days ago
கோவை; சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.