திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மார்கழி உபன்யாசம்
ADDED :301 days ago
திண்டிவனம்; திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை உபன்யாச நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில், மார்கழி மாதம் முழுவதும், காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உபன்யாசம் நடந்து வருகின்றது. இதேபோல், நேற்று காலை உபன்யாசம் நடந்தது. இதில் பாகவதர்கள் ஆதனூர் மணிபெருமுக்கல் ஏழுமலை, ரெட்டணை ராயர், வீராசாமி, தென் பசார் செல்வமணி, மாசிலாமணி ஆகியோர் உபன்யாசம் நடத்தினர். இதில் ஆண்டாள் நாச்சியார் சபை நிர்வாகிகள் சிவராமன், பாண்டிய ராமனுஜதாசர், தனுஷ்கோடி, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.